இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 32 சவரன் மோசடி செய்த இளைஞர் கைது

instagramcheatingcase
By Petchi Avudaiappan Oct 02, 2021 09:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திருவள்ளூரில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி பணம், நகை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு ஆன்லைனில் படிப்பதற்காக அவரது பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்துள்ளனர். ஆனால் அச்சிறுமி  சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார்.

இதனிடையே  சிறுமியிடம் ஆசையாய் பேசிய அந்த இளைஞர் நூதன முறையில் சிறுக சிறுக ரூபாய்  ஒரு லட்சம் வரையில் பணம் பறித்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டில் இருந்து 32 சவரன் தங்க நகைகளையும் மோசடி செய்து வாங்கியுள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர இதுகுறித்து வெங்கல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

அதனடிப்படையில் இளைஞரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.