உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் தளம் - பயனர்கள் தவிப்பு: ஏன் தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் உலகில் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து கொள்ளும் தளமாக உள்ளது ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம். பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை அனைவரும் போட்டோக்களை தங்கள் இஷ்டம் போல இதில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் இந்தியா உட்பட உலகளவில் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்துள்ளனர் பயனர்கள்.
இந்திய நேரப்படி காலை 11.30 முதல் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அந்த தளத்தை பயன்படுத்துவதில் சிக்கலை எதிக்கொண்டதாக Downdetector என்ற தளம் தெரிவித்துள்ளது. இணையதள முடக்கம் குறித்த தகவல்களை பகிரும் பணியை Downdetectorசெய்து வருகிறது.
அதன் கூற்றுப்படி காலை 11.30 மணி தொடங்கி மதியம் 2.10 வரையில் இன்ஸ்டா பயனர்கள் அந்த தளத்தை அணுகியதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
சுமார் 47 சதவிகித பயனர்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இன்ஸ்டா அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாமல் தவித்துள்ளனர். அதே போல இன்ஸ்டாவின் வெப் வெர்ஷனை பயணபடுத்த முடியாமல் 27 சதவிகிதம் பேரும், சர்வர் இணைப்பு சிக்கலை 26 சதவிகிதம் பயனர்களும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைரெக்ட் மெசேஜ் சேவை, ரீல்ஸ், போட்டோ ஃபீட், இன்ஸ்டா லைவ் மாதிரியான சேவைகளை பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்டா பயனர்கள் ட்விட்டரில் ட்வீட் மூலம் இன்ஸ்டாகிராம் முடங்கிய விவரத்தை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து அந்த சிக்கலை களைந்துள்ளது இன்ஸ்டா தரப்பு.
தற்போது வழக்கம் போல இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன், வெப்சைட் என அனைத்திலும் இயங்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.