பாரதியனாக இருப்பது பாக்கியம்....அதிர்ச்சி கொடுக்கும் தோனியின் இன்ஸ்டா Profile...!!
இந்திய நாட்டிற்கு பாரத் என பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக டோனி பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்தியா பெயர் சர்ச்சை
இந்தியா நாட்டின் பெயர் "பாரத்" என மாறப்போவதாக நேற்றைய தினம் முதல் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்றில்லாமல், பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முதல் இந்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், திமுக கட்சியின் முக்கிய தலைவர்கள் இது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தோனியின் இன்ஸ்டா DP
இந்நிலையில், நேற்று இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட்டர் சேவாக் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சேவாக்கை தொடர்ந்து தோனியும் இதற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கொடியின் பின்னணியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் "I am blessed to be a bharatiya" என தோனி தனது இன்ஸ்டாகிராம் Dp'யை தோனி மாற்றியுள்ளார். தமிழகத்தில் பெயர் மாற்றத்திற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தோனியின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது