So cute இன்ஸ்பிரேஷன்னா இதுதான் .. வைரலாகும் குட்டி மீராபாய் பானு !

Viral Video Mirabai Sanu younggirl
By Irumporai Jul 27, 2021 10:10 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மணிப்பூரைச் சேர்ந்த இந்தியாவின் மீராபாய் பானு.

இந்த நிலையில் மீராபாய் பானுவை போலவே செய்த சிறுமியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் : மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுத்தூக்கும் வீடியோ ஓடிக்கொண்டிருக்க கையில் பவுடரை பூசி கெத்தாக சிறுமி மீராபாய் போலவே பளுத்தூக்கி அவர் வென்றவுடன் கையை உயர்த்தியது போலவே உயர்த்தி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வெள்ளி மங்கை மீராபாய் சானுவின் கவனத்தையும் ஈர்க்க அவரும் அதைப் பகிர்ந்து 'So cute. Just love this' என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த குட்டி மீராபாய் பானு இணையத்தில் வைரலாகி வருகின்றார்.