விண்வெளி செல்வதற்காக விண்கலத்தை விலைக்கு வாங்கிய தொழிலதிபர்

usa fly airplane
By Jon Feb 03, 2021 05:13 PM GMT
Report

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செல்லும் உலகின் முதல் all-civilian மிஷனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 'Inspiration 4' எனும் சாதாரண பொது மக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது உலகின் முதல் all-civilian மிஷன் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸின் Dragon விண்கலத்தில் பயணிக்கவுள்ளனர்.

இந்த விண்கலம் 7 பேரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த விண்கலத்தை அமெரிக்க தொழிலதிபரும், பைலட்டுமான Jared Isaacman எனும் கோடீஸ்வரர் விலைக்கு வாங்கியுள்ளார். அவர்தான் 3 சாதாரண பொதுமக்களை இந்த பயணத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்கிறார்.

அவர்களில் ஒருவராக அமெரிக்காவின் செயின்ட் ஜூட் குழந்தைகள் நல மருத்துமனையில் பயியற்றும் ஒரு பெண் செவிலியர் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றோருவர் அதே மருத்துவமனைக்கு அதிக நன்கொடை அளித்த ஒரு நபர் தேர்வாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேரின் முழு விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணத்திற்கு முன்பு அவர்கள் அனைவருக்கு முறையான பயிற்சி வழக்கப்படவுள்ளது.