செல்போனை பிடுங்கிய அப்பா - மாடியில் இருந்து குதிக்க முயன்ற சிறுமியை பாய்ந்து பிடித்த இன்ஸ்பெக்டர்..!
காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாய்ந்து பிடித்து உயிரோடு மீட்டார்.
அப்பாவுக்கு மிரட்டல் விடுத்த சிறுமி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவரது 17 வயது மகள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லுாரிக்கு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் எப்போதும் அந்த சிறுமி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தந்தை மகளிடம் இருந்து செல்போனை பறித்து ஒழித்து வைத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சிறுமி மீண்டும் செல்போன் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். தந்தையை மிரட்டும் வகையில் இரண்டு தளங்களை கொண்ட வீ்டடின் மொட்டை மாடிக்கு சென்று குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக கூறி குதிக்க தயாரானார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கீழே விழுந்தால் அடிபடாத வகையில் மெத்தை போட்டு சிறுமியை காப்பாற்ற தாயராக இருந்தனர்.
நைசாக பேசி சைசாக காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்
ஒரு மணி நேரமாக சிறுமியிடம் சமாதானம் செய்ய முயன்றனர் அக்கம் பக்கத்தினர் ஆனால் அதற்கு செவி சாய்க்க மறுத்து மாடியில் இருந்து இறங்கி வர மறுத்து அடம்பிடித்தார்.
இது குறித்து அறிந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதையும் ஏற்காத மாணவி குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
அப்போது தீயணைப்பு வீரர்களுடன் அருகில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி என்பவர் பேசுவது போல அருகில் சென்றார். அவரை கண்டதும் அந்த சிறுமி உடனடியாக குதிக்க முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரைகளை வழங்கி தந்தையிடம் ஒப்படைத்தனர்.