பாலியல் சர்ச்சையில் சிக்கிய சிவசங்கர் பாபா அறையில் ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதம் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்டு 5 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு பெண் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட மொத்தம் 6 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ளது
இந்நிலையில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அறையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
