தனியார் VKS ராக்கெட் - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை - அனுராக் தாக்கூர் வாழ்த்து..!

Viral Video Indian Space Research Organisation
By Nandhini Nov 18, 2022 07:30 AM GMT
Report

தனது முதல் தனியார் ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் சாதனை படைத்துள்ள இஸ்ரோவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட்

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரலாற்றில் முதல் முறையாக இன்று இஸ்ரோ தனியார் ராக்கெட்டை விண்ணில் பாய்ந்து வரலாறு சாதனை படைத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளது.

அரசு சாரா நிறுவனம் மற்றும் ஸ்டார்ட்அப், SkyrootAerospace Private Limited ஆகியவை VKS ராக்கெட்டை உருவாக்கின.

தனியார் பங்கேற்பிற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் விண்வெளித் துறையைத் திறந்த பிறகு, இஸ்ரோவின் பயணத்தில் இது ஒரு முக்கியமானதாக அமைந்துள்ளது.

அரசு சாரா நிறுவனமான ஸ்டார்ட்அப் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (எஸ்ஏபிஎல்) விக்ரம்-சபோர்பிட்டல் (விகேஎஸ்) ராக்கெட்டை உருவாக்கின.

இது ஒரு நிலை சுழல் நிலைப்படுத்தப்பட்ட திட உந்து ராக்கெட்டாக சுமார் 550 கிலோ எடை கொண்டது. ராக்கெட் அதிகபட்சமாக 101 கிமீ உயரத்திற்குச் சென்று கடலில் தெறிக்கும் என்றும், ஏவுதலின் மொத்த காலம் 300 வினாடிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

inspaceind-sriharikota-vikramsarabhai-isro

இஸ்ரோ வரலாற்று சாதனை

இஸ்ரோ தனது முதல் தனியார் ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

அனுராக் தாக்கூர் வாழ்த்து

இந்நிலையில், தனது முதல் தனியார் ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் சாதனை படைத்துள்ள இஸ்ரோவிற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.