வாழ்க்கை முழுவதும் இலவசமாக படம் பார்க்கும் வசதி - ஐநாக்ஸ் அறிவிப்பு
ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றால் வாழ்க்கை முழுவதும் இலவசமாக படம் பார்க்கும் வசதியை ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் வழங்கியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பாதுகாப்போடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

இதனிடையே இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்க்கை முழுவதும் இலவசமாக ஐநாக்ஸ் திரையரங்குகளில் படம் பார்க்கும் வசதியை வழங்குவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு உள்ள அனைத்து வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஒரு வருடம் இலவசமாக படம் பார்க்க வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதற்காக வீரர்களுக்கு பிரத்யேக அட்டை ஒன்று வழங்கப்படும் என்றும் அதை வைத்து அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இலவசமாக படம் பார்த்துக்கொள்ளலாம் என்று ஐநாக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.