‘‘ஐயா முடியல .. என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள்’’ கதறிய கணவன் .. பிதமர் அலுவலகத்தில் புகார்

Narendra Modi Viral Photos
By Irumporai Nov 03, 2022 06:05 AM GMT
Report

தனது மனைவி கொடுமைபடுத்துவதாகவும் , ஆகவே தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியவாறு பிரதமர் அலுவலகத்திற்கு கணவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனைவி கொடுமை

பெங்களூரை சேர்ந்த யதுநந்தன் ஆச்சர்யா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்,அதில் பெங்களூர் போலிஸ் கமிஷ்னர் பிரதாப் ரெட்டி மற்றும் ,மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோரையும் இணைத்து டேக் செய்துள்ளார்.

‘‘ஐயா முடியல .. என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள்’’ கதறிய கணவன் .. பிதமர் அலுவலகத்தில் புகார் | Innocent Husband Complaint To Prime Ministers

பிரதமர் அலுவலகத்திற்கு புகார்

யது நந்தன் தனது ட்விட்டர் பதிவில் : யாராவது எனக்கு உதவி செய்விங்களா ? ஏனென்றால் நான் மனிதன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் என் மனைவி என்னை கத்தியால் தாக்கினாள், ஆகவே அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு பதியவேண்டும், ஆகவே எனது மனைவி மீது வழக்கு போடலாமா ? என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

அவள் கத்தியால் குத்தியதால் தனது கை படுகாயமடைந்து ரத்தம் கொட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் ( அதாவது மனைவி) தான் ,ஆனால் தனது மனைவியிடமிருந்து தன்னை காப்பாறுமாறு கணவர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தை நாடியுள்ளது, பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.