வீரேந்திர சேவாக்கிற்கு தோனி செய்த அநீதி - தேற்றிய சச்சின்..!

MS Dhoni Sachin Tendulkar Virender Sehwag
By Thahir Jun 02, 2022 08:28 AM GMT
Report

வீரேந்திர சேவாக்கிற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அநீதி இழைத்ததாகவும் அவரை சச்சின் கை கொடுத்து முன்னேற்றியதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக்,சச்சின் ஆகியோர் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் இவர்களும் இருவர். இவர்கள் மைதானத்தில் இறங்கினாலே எதிர் அணியினர் கதி கலங்குவார்கள்.

வீரேந்திர சேவாக்கிற்கு தோனி செய்த அநீதி - தேற்றிய சச்சின்..! | Injustice Done By Dhoni To Virender Sehwag

பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து துவம்சம் செய்யும் இவர்கள் தான் இந்திய அணியின் அப்போதைய ஹீரோக்கள்.

இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட சௌரவ் கங்குலி ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

தோனி வருகைக்கு பிறகு இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று கிரிக்கெட் போட்டியில் முன்னேறி சென்றது.

இவர் கேப்டனாக பதவியேற்ற பின் சில முன்னணி சீனியர் வீரர்களை புறக்கணித்துள்ளார். அதில் முக்கியமானவர் வீரேந்திர சேவாக் அவர் தற்போது தனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.

2008 ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டியில் முதல் நான்கு ஆட்டங்களில் 6,33,11,14 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

வீரேந்திர சேவாக்கிற்கு தோனி செய்த அநீதி - தேற்றிய சச்சின்..! | Injustice Done By Dhoni To Virender Sehwag

இதையடுத்து அவரை விளையாடும் அணியில் இருந்து நீக்கிவிட்டாராம். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விரேந்திர சேவாக் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட போவதாக சச்சினிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட சச்சின் நீங்கள் பொறுமையாக இருங்கள் எல்லோருக்கும் கடின காலம் வரும். நிலைமை சரியாகும் என தேற்றியுள்ளார். இதையடுத்து அவர் சரிவில் இருந்து மீண்டு வந்ததாக கூறினார்.