சுண்டுவிரலில் ஏற்பட்ட காயம்... அலங்கோலமான இளைஞரின் பரிதாபநிலை! ஐ பட பாணியில் நிகழ்ந்த கொடுமை

boy place Madurai injury
By Jon Mar 09, 2021 06:54 PM GMT
Report

மதுரையில் சுண்டுவிரல் காயத்துக்கு சிகிச்சைக்கு சென்ற இளைஞர் ஐ படம் பாணியில் உடல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் பிஸ்வஜீத் மண்டல் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை தெற்குவாசல் எழுத்தாணிக்கார தெருவில் நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் நகைக்கடை பட்டறைகளில் நகை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்த நிலையில், இவரது கையில் கடந்த மாதம் கிரிக்கெட் விளையாட சென்ற போது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தெற்குவாசலில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர், விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கட்டுப்போடவேண்டும் எனக் கூறி, இளைஞருக்கு கட்டுப் போட்டு சில மருந்துகளையும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு பின்னர் கையில் போடப்பட்ட கட்டை அவிழ்த்த பிறகு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற போது மேலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய, நெல்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற போது அவர்கள், அப்போல்லா மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

ஐ படத்தில் கதாநாயகன் போல உடல் முழுவதும் கரும் புண்ணாகக் காட்சியளித்த அவர், மேலமடையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இளைஞருக்கு எந்த மாதிரியான மருந்துகள் கொடுக்கப்பட்டன; அதில் எந்த மருந்தால் இப்படி பக்கவிளைவுகள் விளைவுகள் ஏற்பட்டன போன்ற விவரம் தெரியாததால் குழம்பிப்போயுள்ளார் அந்த இளைஞர்.

எலும்பு முறிவுக்கு மருந்து கொடுத்த மருத்துவரின் அலட்சியத்தால் இந்த அலங்கோலமான நிலை ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறார் பிஸ்வஜீத் மண்டல்.