திருட்டு வேலையில் கில்லாடியாக வேலைப்பார்த்து வந்த பெண் காவலர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் கில்லாடித்தனமாக திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருக்கும் போது கிரேசியா, தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 இரு சக்கர வாகனங்களை திருடிக்கொடுத்தது தெரியவந்தது.
காவல் நிலையத்தில் இருந்து ஒரு மொபைல் போனையும் மற்றும் விசாரணை கைதியின் வெள்ளி கயிற்றையும் அவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலர் கிரேசியா, அவரது கணவர் அன்புமணி ஆகியோர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.