சூரிய கிரகணம் 2021 : அரிய நிகழ்வு - நேரலை இணைப்பை வெளியிட்டது நாசா

6 days ago

 பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரியனின் ஒளியைத் தடுக்கும். இது நடக்கும்போது மொத்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​அது சிறியதாக தோன்றும். சூரியனின் முழு பார்வையையும் தடுக்காது. கிரகணம் நிகழும் போது சந்திரனைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடந்துள்ளது.

கடந்த மே 26ம் தேதி நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை அடுத்து, இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இதை, நாசா வரைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் தெரியும், ஆனால் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து மட்டுமே இதை காண முடியும் என்று தெரிவித்துள்ளது.

கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளை மையமாகக் கொண்டவர்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். பெரும்பாலான பகுதிகளில், 2021 வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வு 01:42 PM (IST) மணிக்கு தொடங்கி 06:41 PM (IST) மணியளவில் உச்சம் பெறும்.

NASA மற்றும் timeanddate.com ஆகிய இரண்டும் சூரிய கிரகணம் 2021ன் நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரிய வானியல் நிகழ்வை நேரடியாக பார்க்கமுடியவில்லை என்றாலும் ஆன்லைனில் இன்று பார்க்க முடியும். நாசாவின் தகவலின்படி, பூமியில் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை வருடாந்திர சூரிய கிரகணங்கள் நிகழும். அவை சந்திர கிரகணங்களைப் போலன்றி சில நிமிடங்கள் மட்டுமே தெரியும்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்