யாஸ் புயல் இன்று கரையை கடக்கிறது - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
யாஸ் புயல் இன்று கரையை கடக்க இருப்பதால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கிறது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
யாஸ் புயல் இன்று பாராதீப்புக்கும் – சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் தம்ரா துறைமுகம் அருகே கரையை கடக்கிறது.
யாஸ் புயல் கரையை கடக்கும் போது, 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசும். மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. கடலோர பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

ஆட்டம் காட்டுகின்றதா இந்தியா...! சற்றுமுன் பாகிஸ்தானை அலற விடும் வெடிச்சத்தங்கள் - சைரன்கள் IBC Tamil
