கொரோனா நோயாளிகளுக்காக ஆயுஷ் அமைச்சகம் சார்பில் ஹெல்ப்லைன் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை கொடுப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் உதவி மையத்தை தற்போது தொடங்கியுள்ளது.
14443 என்ற இந்த ஹெல்ப்லைன் மூலம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.
இந்த வல்லுநர்கள், நோயாளிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் எடுத்துக் கூறுகிறார்கள்.
தற்போது, இந்த ஆயுஷ் ஹெல்ப்லைன் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வழங்கப்படும்.
விரைவில், பிற மொழிகளிலும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆயுஷ் அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கி வருகிறது.