கமல் முன்னிலையில் ஜோராக நடந்த சினேகன் திருமணம் - ரசிகர்கள் உற்சாகம்! இதோ புகைப்படங்கள்!!

சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில், தனது காதலி கன்னிகாவைக் சினேகன் கரம் பிடித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே இன்று சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர்.

சீர்திருத்த முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்