கமல் முன்னிலையில் ஜோராக நடந்த சினேகன் திருமணம் - ரசிகர்கள் உற்சாகம்! இதோ புகைப்படங்கள்!!

kamal snehan marriage kannika ravi
By Anupriyamkumaresan Jul 29, 2021 07:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில், தனது காதலி கன்னிகாவைக் சினேகன் கரம் பிடித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

கமல் முன்னிலையில் ஜோராக நடந்த சினேகன் திருமணம் - ரசிகர்கள் உற்சாகம்! இதோ புகைப்படங்கள்!! | Infront Of Kamal Snehan Married A Kannikaravi

இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே இன்று சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர்.

கமல் முன்னிலையில் ஜோராக நடந்த சினேகன் திருமணம் - ரசிகர்கள் உற்சாகம்! இதோ புகைப்படங்கள்!! | Infront Of Kamal Snehan Married A Kannikaravi

சீர்திருத்த முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.  