70 மணி நேர வேலை; ஆனால், சம்பள உயர்வு? கைவிரித்த இன்ஃபோசிஸ்!
ஐடி துறையில் சம்பள உயர்வு தள்ளிவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்போசிஸ்
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இங்கு ஆண்டின் துவக்கத்தில் சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், கடைசியாக கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், 2024-25 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டின் சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம், பொருளாதார காரணிகள் உள்ளிட்ட மேக்ரோ-பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக கிளையண்ட்கள் ஐடி செலவினங்களை அதிகரிக்கவில்லை என்பதுதான் மந்தநிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
சம்பள உயர்வு?
மேலும், டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் வரி விதிப்பு அதிகரிக்கப்படலாம் என்பதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இலாபம் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரிக்கவே செய்துள்ளது.
ஜூலை - செப்டம்பர் இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.6,506 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் ரூ.6,212 கோடியாக இருந்தது. இதனால் இந்த முடிவு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இன்போசிஸ் மட்டும் இன்றி ஹெச்.சி.எல் டெக், எல்.டி.ஐ மிண்ட்ரீ மற்றும் எல்&டி டெக் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களும் இரண்டாவது காலாண்டில் சம்பளம் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.