எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு? சாஸ்திரம் சொல்லும் தகவல்கள்
சாஸ்திரத்தில் எந்த நாள் எந்த தவறு செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரத்தில் எப்படி ஜாதகத்தின் கிரகங்கள் மூலம் எதிர்காலம் சொல்லப்படுகிறதோ, அதே போல சாமுத்ரிகா சாஸ்திரத்திலும் நாம் செய்யும் செயல்களுக்கு பலன் உண்டு. அதிலும் நாம் எந்த கிழமைகளில் எந்த மாதியான செயல்களை செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஞாயிறு: இரும்பு சார்ந்த பொருள் வாங்க கூடாது. வீட்டின் அமைதி கெடும், உறவு விலகும்.
திங்கள்: சாவு துக்கம் விசாரிக்க கூடாது. இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல.
விளைவுகள்
செவ்வாய்: பெண்கள் அணிந்துள்ள, நகையை கழட்டுவதோ, கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. வீட்டின் செல்வ வளம் மறையும்.
புதன்: கண் சிகிச்சை செய்ய கூடாது, பாதிப்பு அதிகரிக்கும்.
வியாழன்: பித்ரு நிந்தனை கூடாது. குலசபத்தை உண்டாக்கும்.
வெள்ளி: கண் திருஷ்டி சுத்த கூடாது. வீட்டிலிருந்து மகாலட்சுமி விலகி செல்வாள்.
சனி: கடன் வாங்க கூடாது, கடன் பெருகி, தரித்திரத்தை ஏற்படுத்தும்.