சிறையில் தவறி விழுந்த செந்தில் பாலாஜி; நரம்புகள் எடுக்கப்பட்ட இடத்தில் வலி - வெளியான தகவல்!

V. Senthil Balaji Tamil nadu DMK
By Jiyath Oct 09, 2023 08:45 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தவறி விழுந்த செந்தில் பாலாஜி; நரம்புகள் எடுக்கப்பட்ட இடத்தில் வலி - வெளியான தகவல்! | Information About Minister Senthil Balaji Health

ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கக் கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அவரின் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் புழல் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறை மருத்துவமனையில் அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவு

ஆனால் அவரின் இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். செந்தில் பாலாஜி புழல் சிறையில் காலை 4.30 மணி அளவில் தனது படுக்கையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

சிறையில் தவறி விழுந்த செந்தில் பாலாஜி; நரம்புகள் எடுக்கப்பட்ட இடத்தில் வலி - வெளியான தகவல்! | Information About Minister Senthil Balaji Health

உடனடியாக காவல்துறையினர் சிறை மருத்துவர்களை அணுகி அவரது உடல்நிலை கண்காணித்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை 6.45 மணியளவில் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றபோது போது அவரது கால்களில் இருந்த நரம்புகள் எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. கால்களில் நரம்புகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் அவருக்கு அதிக வலி இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளனர்.