அதிமுகவே வேண்டாம்...திடீரென தாமரை கட்சிக்கு தாவிய மைத்ரேயன்

ADMK AIADMK BJP
By Thahir Apr 09, 2023 07:58 AM GMT
Report

அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கம் 

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார்.

பின்பு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவரது அணியில் இருந்தார். பின்னர் பல்வேறு சர்ச்சையின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியின் பக்கம் வந்தார்.

information-about-maitreyan-to-join-bjp

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைத்ரேயனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தாமரைக்கு தாவ உள்ளதாக தகவல் 

information-about-maitreyan-to-join-bjp

இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.