சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் முறை குறித்து வெளியான முக்கிய தகவல்

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான மதிப்பெண் முறை குறித்து சிபிஎஸ்இ செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார்.இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்ச்சி முறையை வகுப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

இந்தக் குழு இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் என சிபிஎஸ்இ செயலாளர் கூறியுள்ளார். இதன் முடிவுகளை சிபிஎஸ்இ மறுபரிசீலனை செய்து, மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாணவர்கள் குறித்த தரவுகளை பெற்று அதன் அடிப்படையில்தான் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிக நீண்ட பணி என்பதால் அதனால் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஎஸ்இ செயலாளர் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்