தமிழகத்தில் வேகமெடுக்கும் 4 வகை மர்ம காய்ச்சல் - கவனமா இருங்க.!

Cold Fever Tamil nadu Virus
By Sumathi Mar 12, 2023 04:07 AM GMT
Report

பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் இதோ.,

 டெங்கு காய்ச்சல்

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இனிப்பு சுவையுள்ள உணவுகளைக் குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க கூறப்படுகிறது.

தமிழகத்தில் வேகமெடுக்கும் 4 வகை மர்ம காய்ச்சல் - கவனமா இருங்க.! | Influenza Symptoms And Effects In Tamilnadu

 மலேரியா

காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை மலேரியா காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள். காரமான உணவுகளை குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.

இன்ஃப்ளூயன்சா

மூச்சு திணறல், நெஞ்சுப் பகுதியில் வலி, தலைசுற்றல், வலிப்பு போன்றவை இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கான அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒமைக்ரான்

மேலும், மீண்டும் தற்போது காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி இருந்தால் ஒமைக்ரான் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டமான இடங்களை தவிர்ப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது நல்லது.