தீவிரமாக பரவும் வைரஸ்; விரைவில் ஊரடங்கு? 4,000 பேர் மருத்துவமனையில் அனுமதி!
இன்ஃப்ளூயன்சா பரவல் அதிகரித்து வருகிறது.
இன்ஃப்ளூயன்சா
ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 3ஆம் தேதி வரை 4,000 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 957 பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு?
இதன் காரணமாக ஓகினாவா, டோக்கியோ, ககோஷிமா உள்ளிட்ட பகுதிகளில் 135 பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதன் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.