பட்ஜெட் விலையில் அறிமுகமான புதிய ஸ்மார்ட்போன் - என்ன ஸ்பெஷல்?

Smart Phones
By Petchi Avudaiappan Apr 28, 2022 04:13 PM GMT
Report

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

இந்திய மொபைல் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வாரமும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற போட்டி போட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.6 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22 பிராஸசர், 2GB ரேம், 64GB மெமரி, 5000mAjh பேட்டரி, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்தகைய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 மாடலின் விலை ரூ. 7,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.