ரூ.6,999 விலையில் இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன்...!

infinix smart 5a Infinix smartphone
By Petchi Avudaiappan Jul 31, 2021 07:18 PM GMT
Report

 இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இணையதளத்தில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் விளம்பரம் மூலம் இதன் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரித் திறன், 13 எம்பி பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 8 எம்பி செல்ஃபி கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 6,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.