‘சிசுக்கொலை’ என்ற குறும்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை - நிலைகுலைந்த பெற்றோர் - பரபரப்பு சம்பவம்
விழுப்புரம் மாவட்டம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாறன். இவரது மகள் துர்க்காதேவி (17). இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
துர்க்காதேவி, ‘சிசுக்கொலை’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படத்திற்கான டீஸர் 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. நேற்று முன்தினம் இரவு துர்க்காதேவி தனது வீட்டு அறைக்கு சென்று கதவை மூடினாள். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும், கதவு திறக்கவில்லை. இதனையடுத்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, துர்க்காதேவி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தாள்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கதறி துடித்தனர். உடனடியாக விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துர்க்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், துர்க்காதேவிக்கு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாள். இதனால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனாலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினர்.