சும்மா இல்ல பாஸ் 7 வருட தவம் .. செம ஹேப்பி மூடில் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Virat Kohli IND vs ENG James Anderson
By Irumporai Aug 06, 2021 08:41 AM GMT
Report

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆண்டர்சன் ஏழு வருட காத்திருப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர் .

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் விராத் கோலியை 4 முறை ஆட்டமிழக்க செய்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆனால், 2018 ஆம் ஆண்டு, இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, கோலியின் விக்கெட்டை ஆண்டர்சனால் எடுக்க முடியவில்லை இந்த நிலையில் இப்போது, முதல் போட்டியிலேயே கோலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.

அதாவது ஏழு வருடங்களுக்கு பிறகு கோலி விக்கெட்டை அவர் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராத் கோலியின் விக்கெட்டை 9ஆவது முறையாக அவர் வீழ்த்தி இருக்கிறார்.

இதுபற்றி ஆண்டர்சன் கூறும்போது, அவருக்கு ஏற்கனவே சவால் விட்டதாக நினைக் கிறேன். அதே போல எந்த இடத்தில் பந்தை வீசினால் அவர் விக்கெட்டை இழப்பார் என சரியாக கணித்தே, பந்தை வீசினேன். நினைத்தபடியே அவர் ஆட்டமிழந்தார். விராத் கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது சாதாரணமானதல்ல. அதனால் அதிக உற்சாகமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.