மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் வோக்ஸ் .. 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

indvseng englandteam chriswoakes
By Irumporai Aug 29, 2021 11:59 PM GMT
Report

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தத் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது.

நான்காவது போட்டி ஓவல் மைதானத்தில் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் அந்தப் போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது .

இங்கிலாந்து ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பேர்ன்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், போப், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர். இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல சாம் பில்லிங்ஸ் இணைந்துள்ளார். பட்லர் அணியிலிருந்து விலகியுள்ளார்.