ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி ... IND vs BAN ODI ..இரட்டை சதமடித்தார் இஷான் கிஷன்

By Irumporai Dec 10, 2022 09:20 AM GMT
Report

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

IND vs BAN   

இஷான் கிஷன் அதிரடியால் இந்திய அணி 295/1 ரன்கள் குவித்துள்ளது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தவான் 3 ரன்னில் முதல் விக்கெட்டை இழக்க அதன் பின் இஷான் கிஷன்-விராட் கோலி ஜோடி சேர்ந்து 280 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர்.

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி ... IND vs BAN ODI ..இரட்டை சதமடித்தார் இஷான் கிஷன் | Indvsban Odi Ishan Kishan Double Century

இரட்டை சதம்

மைதானத்தின் நாலாபுறமும் பந்தை அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 23 போர்கள், 9 சிக்ஸர்களுடன் 200* ரன்களும், விராட் கோலி 85* ரன்களும் குவித்து விளையாடி வருகின்றனர்

. 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 295/1 ரன்கள் குவித்துள்ளது.