மிரட்டிய பாகிஸ்தான்அதிரடி ரூட் போட்டு கலக்கிய கிங் கோலி : இந்தியா 151 ரன்கள் சேர்ப்பு

T20WorldCup INDvsPAK indiaVsPakistan
By Irumporai Oct 24, 2021 03:53 PM GMT
Report

 டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் 'போட்டிகள் தொடங்கியுள்ளன.

இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ராகுல், ரோஹித் களமிறங்க ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். ரோஹித் சர்மா எதிர்கொண்ட முதல் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

அணியின் ஸ்கோர் 1 ரன்னுக்கு 1 விக்கெட் விழுந்த நிலையில் கேப்டன் கோலி களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 2.1 ஓவரில் 6 ரன்கள் இருக்கும் போது ஷாஹீன் அப்ரிடியின் அசுர பந்து வீச்சில் கே.எல் ராகுல் 3 ரன்னில் போல்ட் ஆகி வெளியேற கோலியுடன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

6ஆவது ஓவரை வீசிய ஹசன் அலி வீசிய 4ஆவது பந்தில் அணியின் ஸ்கோர் 31ஆக இருந்த போது முஹம்மத் ரிஸ்வான்னிடம் கேட்ச் கொடுத்து சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 8 பந்துகளில் வெறும் 11ரன்னில் ஆட்டமிழக்க  ரிஷப் பண்ட் இறங்கி அதிரடி காட்டினார்.

கோலி - ரிஷப் பண்ட் ஜோடி 50 ரன்னை கடந்த நிலையில் அணியின் ஸ்கோர் 12.2ஓவரில் 84 இருந்த போது பந்து வீசிய ஷதாப் கானிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் 2சிக்ஸ், 2பவுண்டரியுடன் 30 பந்தில் 39ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி முதல் ஓவரிலே களத்துக்கு வந்து போராடி வருகின்றார்.

இந்திய அணியின் விக்கெட் அடுத்தடுத்து சரிந்தாலும், நம்பிக்கை நாயகனாக நின்று பாகிஸ்தான் பவுலர்களை மிரட்டி வருகின்றார். கிங் கோலி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த நிலையில் வகையில் அவரின் ஆட்டம் உள்ளது. கோலி 45 பந்தில் 50 ரன் அடித்து அசத்தினார்.

ஆனால் 18.4 வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் 

அடுத்துவந்த ஹர்த்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தானில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்களையும் ஹஸன் அலி 2 விக்கெட்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். பாகிஸ்தானில் கேப்டன் பாபர், ரிஸ்வான் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் தற்போது பார்மில் உள்ளனர்.

எனினும் இந்தியாவிடம் வருண், ஜடேஜா, ஷமி கடும் அட்டாக் செய்யலாம் என்பதால் யார் வெற்றி என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.