ஆனா ஆவன்னா வாத்தி வாத்தி ரைடுனா : வான்கடே டெஸ்ட் , வலுவான நிலையில் இந்தியா!

 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து போராடி 'டிரா' செய்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில்தொடங்கியது

 மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கிறது. புற்களும் ஓரளவு இருப்பதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்றும், பவுன்சும் சற்று அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி நியூஸிலாந்தை விட 405 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது. மூன்றாம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்கள் எடுத்தது.

மயங்க் அகவர்வால் 150 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்தார். 

பின்னர் நேற்று முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது .

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்