என்னப்பா இது சோதனை - சோதப்பல் பேட்டிங், தோல்வியை நோக்கி நகர்கிறதா? இந்திய அணி

indvsnz 4thday
By Irumporai Nov 28, 2021 07:33 AM GMT
Report

நியூஸிலாந்து வீரர்கள் சவுதி, ஜேமிஸன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆட்டமிழந்தனர்.

இதனால் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. பிற்பகல் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது.

அஸ்வின் 20 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆடுகள் மந்தமாகவும், பந்து பவுன்ஸ்ஆகாமலும், ஸ்விங் ஆகாமலும் வருகிறது இதனால் பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆடுவது சிரமமாக இருந்து வருகிறது.

இந்திய அணி தற்போது 133 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்தார்போல் கடைசி வரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லை.

இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் கடைசி நாளான நாளை நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து சுருட்ட முடியும் இல்லாவிட்டால் இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டுவிட்டால் ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.

இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.