புதிய தொழிற்கொள்கை இன்று வெளியீடு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதல்வர் எடப்பாடி இன்று வெளியிட உள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு - சென்னை எம்.ஆர்.சி.நகரில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை வெளியிட உள்ளது.
முதலமைச்சர் முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
மணப்பாறை, ஓரகடம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி ஆகிய இடங்களில் சிப்காட் அமைப்பதற்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.