Pitchங்கில் சுழன்றடிக்கும் பந்து... - பேட்டிங்கில் வீரர்கள் திணறல்...!
ஆஸ்திரேலியாவின் அபார சுழற்பந்து வீச்சால் மண் சரிவு போல் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்தது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா
வெற்றி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சரிந்த விக்கெட்டுக்கள்
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் ரோகித் சர்மா, சுக்மன் கில், புஜாரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர்.
சுழன்றடிக்கும் பந்து
இந்நிலையில், இந்தூரில் நடந்து வரும் டெஸ் போட்டியில் முதல் நாளில் முதல் ஆட்டத்திலேயே 4.8 அளவுக்கு பந்துகள் சுழலுகிறது.
சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் சவாலாக உள்ளதால், சீட்டுக்கட்டுப்போல இந்திய டாப் ஆட்டக்காரர்கள் விக்கெட் இழந்து வெளியேறினர்.