இஸ்லாமிய இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - மூவர் கைது

Arrest Indore Muslim Bangle Seller
By Thahir Aug 23, 2021 12:12 PM GMT
Report

வளையல் விற்று சென்ற இஸ்லாமிய வியாபாரி தஸ்லீம் மீது தாக்குதல் நடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இஸ்லாமிய வியாபாரி ஒருவர் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்துாரில் உள்ள கோவந்த் நகரில் 25 வயதான தஸ்லீம் அப்பகுதியில் வளையல் விற்றுள்ளார்.அப்போது அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வெளியானது.

அப்போது அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தான் விற்பனைகாக வைத்திருந்த வளையல்களை அடித்து நொறுக்கியதாகவும் தன்னிடம் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை பறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதரவு குரல்கள் எழுந்ததையடுத்து வளையல் வியாபாரி தஸ்லீமை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.