காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் - ஊர்வலம் சென்ற இளம் பெண்கள்
தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் என இளம் பெண்கள் ஊர்வலம் சென்றுள்ளனர்.
பெண்கள் ஊர்வலம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் இளம் பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி சாலைகளில் கூட்டமாக ஊர்வலம் சென்றுள்ளனர்.
அந்த ஊர்வலத்தில் தாடி இல்லாத ஆண்கள் வேண்டும் என முழக்கமிட்டு கொண்டே சென்றனர்.
தாடி இல்லாத ஆண்கள்
மேலும் கையில் ஏந்திய பதாகைகளில், "No Clean Shave, No Love," , "keep a beard or keep a girlfriend, the choice is yours," என எழுதி இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Clean shave ke liye ladkiyon ne kiya kalesh? pic.twitter.com/QkmIROdDyk
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 17, 2024
அந்த விடியோவின் கீழ் பெண் பயனர் ஒருவர், "தாடி வைத்த ஆண்கள்தான் அழகு" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், "Indore girls," to remain, "Indoors," என கமெண்ட் செய்துள்ளார். "இது சேவிங் பிராண்டின் செயல்" என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தாடி உள்ள ஆண்கள் அழகா அல்லது தாடி இல்லாத ஆண்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது.