சாலையில் ஆடிய பெண்- கடைசியில் நடந்த விபரீதம்

dance Indore viral video
By Petchi Avudaiappan Sep 15, 2021 10:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றுக்காக சாலையில் பெண் ஒருவர் ஆடியோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து அதை போலவே பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் ஷார்ட் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி கொண்ட ரீல்ஸ் என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோவிற்கு நடனம் ஆடி சிக்கலில் மாட்டி உள்ளார். அங்குள்ள இந்தூர் பகுதியில் ஷ்ரேயா கால்ரா என்ற பெண் அதிகமான பார்வைகள் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டு கார்கள் செல்லும் பிஸியான சாலையில் நடனம் ஆடி உள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் ஷ்ரேயாவை கண்டுபிடித்த இந்தூர் போலீசார் அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனார். சாலை விதிகளை மீறியதற்காகவும், மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதற்காகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இப்படி வீடியோ வெளியிட்டதற்கு விளக்கம் அளிக்கும்படி குறிப்பிட்டுள்ளனர்.அவர் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனைக் கண்டு பயந்து போன அவர் தனது வீடியோவின் கேப்ஷனை ல்லோரும் சாலை விதிகளை மதியுங்கள், மாஸ்க் போடுங்கள் என்று மாற்றியுள்ளார்.