எனக்கு இப்போ கல்யாண வயசுதான் ... ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்!
ஒரே மணமேடையில் காதலி மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண் என இரண்டு பேர்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் ஆனால் அவர் பெற்றோர்கள் நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தால் உறவினர்கள் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.
உறவினர்களின் ஆலோசனை முடிவில்அந்த இளைஞர் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளுமாறு பேசி முடிக்கப்பட்டது.

இதனால் காதலி மற்றும் நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஆகிய இருவரையும் அந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார்.
அந்த இளைஞருக்கு 20 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரே மணமேடையில் அவர் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவ கல்யாணம் ஆகாத 90 s kids கள் செம்ம கோபத்தில் கலாய்த்து வருகின்றனர்.