இந்தியாவில் குறையும் பாமாயில் விலை ... ஏற்றுமதிக்கான தடை நீக்கிய இந்தோனேஷியா

By Petchi Avudaiappan May 20, 2022 05:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்கி வரும் நிலையில் அங்கி இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேபோல் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் இட்ம் பெற்றிருந்தது. 

அதேசமயம் இந்தோனேசியா பாமாயில் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.க்கள் தொடர் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து  பாமாயில் ஏற்றுமதிக்கான தடை  வரும் மே 23 ஆம் தேதியில் இருந்து விலக்கப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.