நிலைகுலைந்த இந்தோனேசியா - நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு...!
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கான வீடுகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலி எண்ணிக்கை 162ஆக உயர்வு
இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. 2200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

انڈونیشیا میں شدید ترین زلزلہ۔ 56 لوگوں کی ھلاکت 700 سے زیادہ زخمی ھو گئے
— Bermuda News Network (@Bermuda_Intl) November 21, 2022
A 5.6 magnitude #Earthquake in Indonesia killed at least 56 people and injured about 700 – with the death toll expected to rise,say officials.The quake shook the West Java province.#IndonesiaEarthquake pic.twitter.com/d0gBTPm55T
#IndonesiaEarthquake | At least 162 people have died, and over 1,300 people have been displaced so far.
— The Weather Channel India (@weatherindia) November 22, 2022
Earthquakes are common in #Indonesia, as it sits on the "ring of fire" area of tectonic activity in the Pacific.
Read: https://t.co/Z9IaDZKM95 pic.twitter.com/HcmQ3pl5eT