இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் - 44 பேர் பலி - 700 பேர் படுகாயம் - மக்கள் அலறி அடித்து ஓட்டம்...!

Viral Video Indonesia Earthquake Death
By Nandhini Nov 21, 2022 12:11 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். 

கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.        

indonesia-earthquake-viral-video-44-people-death