இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - உயிரிழப்பு 268 ஆக அதிகரிப்பு

Indonesia
By Thahir Nov 22, 2022 03:22 PM GMT
Report

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ ஆழத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பயங்கர நிலநடுக்கம் 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 506 ஆக பதிவானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதில் கட்டிடங்கள் கிழே விழுந்து நொறுங்கியது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை மொத்தம் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - உயிரிழப்பு 268 ஆக அதிகரிப்பு | Indonesia Earthquake Death Toll Rises To 268

இதுபற்றி தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் ஹென்றி அல்பியாந்தி கூறும் போது, பாதிக்கப்பட்ட பகுதி பரவி கிடக்கிறது. கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. மீட்பு பணி சவாலாக உள்ளது.

13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில் பெருமளவில் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம் மதியம் 1 மணியளவில் பள்ளி கூடங்களிலேயே இருந்து உள்ளனர் என கூறினார். நிலநடுக்கத்தால் மின்சாரம் தடைபட்டுள்ளது. நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதி நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 5,300க்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.