நீட் தேர்வு ரத்து: திமுக எம்.பி.வில்சன் தனிநபர் மசோதா

By Fathima Dec 03, 2021 01:42 PM GMT
Report

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கான விலக்கை எப்பாடுபட்டாவது கொண்டு வந்து விடுவோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் ஒரு முயற்சியாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இந்த தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.

இரண்டாவதாக, மண்டலவாரியாக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.