வெறும் ஒரு ரூபாய்க்கு விமான பயணம் - முன்பதிவு செய்வது எப்படி?

Flight
By Sumathi Oct 24, 2025 12:19 PM GMT
Report

இண்டிகோ ஒரு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது.

இண்டிகோ 

இண்டிகோ நிறுவனம் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 'Infant Fly at Rs.1' என்ற பெயரில், 0-24 மாத குழந்தைகள் வெறும் 1 ரூபாயில் பயணிக்கலாம்.

வெறும் ஒரு ரூபாய்க்கு விமான பயணம் - முன்பதிவு செய்வது எப்படி? | Indigo Infant Flight Offer Travel One Rupee

இந்த சலுகை நவம்பர் 30, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் முதல் 2 வயது (24 மாதங்கள்) வரையிலான குழந்தைகள் தகுதியானவர்கள்.

சமோசாவால் பறிபோன வேலை; இளைஞரை விடாத வியாபாரி - வைரலாகும் வீடியோ

சமோசாவால் பறிபோன வேலை; இளைஞரை விடாத வியாபாரி - வைரலாகும் வீடியோ

சிறப்பு சலுகை

செக்-இன் போது வயதுச் சான்றிதழ்களை காட்ட வேண்டும். பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை ஏற்கப்படும். இல்லையெனில் முழு கட்டணம் செலுத்த வேண்டும்.

வெறும் ஒரு ரூபாய்க்கு விமான பயணம் - முன்பதிவு செய்வது எப்படி? | Indigo Infant Flight Offer Travel One Rupee

இந்த சலுகை இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான (goIndiGo.in) மூலம் மட்டுமே கிடைக்கும். ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

ஏர்பஸ் A320: அதிகபட்சம் 12 குழந்தைகள். ATR விமானங்கள்: அதிகபட்சம் 6 குழந்தைகள்.