"நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி கிடையாது! விமானத்தில் கத்தி கூச்சல்போட்ட பணிப்பெண்

Viral Video India Flight
By Nandhini Dec 22, 2022 06:04 AM GMT
Report

‘நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி கிடையாது’ என்று இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் கத்தி கூச்சல்போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி கிடையாது

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், துருக்கி, இஸ்தான்புல்லிலிருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6இ 12 விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் உணவைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இண்டிகோ பயணிக்கும் விமானப் பணிப்பெண்ணுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விமானப் பயணி, பணிப்பெண்ணிடம் "நீங்கள் பயணிகளின் வேலைக்காரர்" என்று சொல்கிறார்.

அதற்கு, அப்பெண் "நான் ஒரு பணியாளர். உங்கள் வேலைக்காரர் அல்ல... என்று திருப்பி கூறுகிறார். இந்த வாக்குவாதம் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் அப்பயணி ‘ஏன் கத்துகிறீர்கள்? வாயை மூடு" என்று தெரிவிக்கிறார்.

அதற்கு அப்பணிப்பெண் உங்கள் வாயை மூடுங்கள் என்று சண்டைப் போட்டுள்ளார்.

தற்போது இது குறித்து வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

indigo-flight-delhi-argument-attendant-passenger