கடுப்பேற்றிய விமான ஊழியர் - கொந்தளித்த பூஜா ஹெக்டே!

Tamil Cinema Twitter Pooja Hegde India
By Sumathi Jun 09, 2022 06:38 PM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே தன் ட்விட்டர் பக்கத்தில் இண்டிகோ விமான ஊழியர் ஒருவரைக் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதன் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் மவுசு தந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளது.

கடுப்பேற்றிய விமான ஊழியர் - கொந்தளித்த பூஜா ஹெக்டே! | Indigo Attendant Misbehaves With Pooja Hegde

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே ஒரு பதிவு இட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும்,

இண்டிகோ 

அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள

பூஜா, தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாக

இண்டிகோ விமானத்தை டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். பிரபல விமான நிலைய ஊழியர் மீது பிரபல நடிகை நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.