இந்திய அணி இங்கிலாந்தை அசால்டாக வீழ்த்தும் - அடித்து சொல்லும் ஹர்பஜன் சிங்!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று துவங்க உள்ளது.
சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசாக திகழ்ந்து வரும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
ரசிகர்களை போன்றே முன்னாள் வீரர்களும் இந்த தொடருக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர், அதே போல் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்பையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ள சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் தோல்வியடைந்ததை மட்டும் வைத்து இந்திய அணியை குறைத்து மதிப்பிட கூடாது.
தற்போதைய இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது. இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதால் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. ஆனால் வெறும் ஒரு போட்டி எதையும் தீர்மானித்து விடாது.
இந்திய அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்து
அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிச்சயம் மூன்று போட்டிகளிலாவது வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
