விலையெல்லாம் குறைவுதான்.. ஆனால் பணக்கார மதுபான நிறுவனம் இதுதான்!
இந்தியாவின் பணக்கார மதுபான நிறுவனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்
மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றின் அதிக தேவை காரணமாக பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. இந்தியாவில் மலிவான மதுபானத்தை விற்பனை செய்து வரும் நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ்.
பங்குச் சந்தையில் யுனைடெட் ஸ்பிரிட்ஸின் சந்தை மூலதனம் 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இந்த நிறுவனம் பல ஆடம்பர மதுபான பிராண்டுகளையும் உற்பத்தி செய்கிறது.
அதிக விற்பனை
இந்த நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை மதுபானம் மெக்டோவல்ஸ். இதுதான் அதிக விற்பனையாகும் தயாரிப்பு எனக் கூறப்படுகிறது. ஷார்ட் ஸ்டோரி ( Short Story),மகா ஜாய் (Maka Jai) மற்றும் கமிகாரா (Camikara) போன்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ‘ரம்’ வகை மதுபானங்கள்,
சில ஆண்டுகளாக மதுபான விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன. பெருநகரங்களில் ரம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே புதுமையான முயற்சிகளை மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.